’செல்ஃபி’ திரைப்படத்தின் வெற்றி விழா – புகைப்படங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.
இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-