Savarakathi Movie – Thangakathi Song Video

கொடூரமான கொலை ஆயுதமான சிலுவை ஒரு மாமனிதனின் மகத்தான தியாகத்தால் தியாகத்தின் குறியீடாக மாறியது.  அதைப் போல, கத்தி என்பது கொலைக்கானது அல்ல; அது ஜனனத்தின் குறியீடு, தொப்புள் கொடியை அறுப்பதன் மூலம் என்கிறார் மிஷ்கின்.  மிஷ்கின் எழுதிய, அருள் கொரேலி இசையமைத்த இந்த அற்புதமான பாடலைக் கேட்டேன்.  சவரக் கத்தி மிஷ்கினின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு.  வாழ்த்துக்கள் நண்பனே…

இதை எழுதிய பிறகுதான் மிஷ்கினுக்கு ஃபோன் போட்டு யார் குரல் என்றேன்.  உங்கள் நண்பனின் குரல், கண்டு பிடியுங்கள் என்றார்.  ம்ஹும்.  முடியவில்லை.  ஆனால் அற்புதமான குரல் என்றேன்.  நான் தான் என்று சிரித்தார்.  அபாரமான குரல் வளம்.  பொறாமையாக இருக்கிறது மிஷ்கின்.

  • சாரு நிவேதிதா, எழுத்தாளர்
Read previous post:
0a5c
விவாகரத்து கோரி அமலாபால் – விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மத்த்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில்,

Close