’காஃபி வித் காதல்’ படத்துக்காக புகழ்பெற்ற “ரம் பம் பம்” பாடல் ரீமிக்ஸ் – வீடியோ

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காஃபி வித் காதல்’. சுந்தர்.சி, ஜீவா, ஜெய் கூட்டணியில் உருவான கலகலப்பு 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு மூவரும் இணைந்து நடித்துள்ள படம்தான் காபி வித் காதல். இந்த படத்திற்கான ஷூட்டிங் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பூ தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த்-ம் கதாநாயகனாக இணைந்துள்ளார். மேலும் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் யோகி பாபு, கிங்க்ஸ்லி, டிடி போன்ற பலரும் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்துக்காக ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

வீடியோ:

Read previous post:
0a1f
‘ராக்கெட்ரி’ நம்பி நாராயணனின் நிஜக்கதை!

நடிகர் மாதவன் முதன்முறையாக இயக்கி, நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படம் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர், உலகத்தின் தலை சிறந்த ராக்கெட்

Close