‘பேட்ட’ ட்ரெய்லரில் ரஜினியின் ஆன்மீக வசனம்: “கொல காண்ட்ல இருக்கேன்; கொல்லாம விட மாட்டேன்” – வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் மகேந்திரன் சசிகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி, வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘பேட்ட’.
இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் “கொல காண்ட்ல இருக்கேன்; கொல்லாம விட மாட்டேன்” என்று ரஜினி பேசும் “ஆன்மிக” வசனம் இடம் பெற்றுள்ளது:-