சூர்யா தயாரித்துள்ள ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் ‘காசு’ பாடல் – வீடியோ

’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது. ’காசு’ என்ற தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப் பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார் இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.

பாடல் வீடியோ:

Read previous post:
C
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில்,

Close