கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 தளத்தில் 29ஆம் தேதி வெளியாகும் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் – வீடியோ

‘வணக்கம் சென்னை’, ’காளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கி, தமிழ் திரைப்பட  ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் திகழ்பவர் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. தற்போது இவரது  இயக்கத்தில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் தயாராகியுள்ளது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ’பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கௌரி கிஷன், கருணாகரன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், ஜி.எம்.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

ரிச்சர்ட். எம்.நாதன் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த வெப் சீரிஸுக்கு சைமன்.கே.கிங், வேதங்கள்,  தரண் குமார் ஆகிய 3 இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

வருகிற ஜூன் 29ஆம் தேதி முதல் ’பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’பேப்பர் ராக்கெட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில்  நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன், விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா, சின்னி ஜெயந்த், கருணாகரன், காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட் நடிகைகள் தான்யா ரவிச்சந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், விஜயலட்சுமி, இயக்குனர்கள் மிஷ்கின், மகிழ் திருமேனி, மாரி செல்வராஜ், பாலாஜி தரணிதரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் வெளியிடப்பட்ட  ட்ரெய்லர்:-

Read previous post:
0a1c
மகாவீர்யர் – விமர்சனம்

மொழி: மலையாளம் நடிப்பு: நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவத்சவா, சித்திக் மற்றும் பலர் இயக்கம்: அப்ரித் ஷைனி தயாரிப்பு: பாலி ஜூனியர் பிக்சர்ஸ் &

Close