ஓவியா பிக்பாஸை விட்டு வெளியேறி காரில் செல்வதாக உலவும் புகைப்படம் போலி!

விஜய் டிவி ஒளிபரப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாள் முதல் சிறப்பான ஆளுமைத் திறனை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்றுவந்த நடிகை ஓவியா, கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நிதானமின்றி நடந்துகொண்டு அதிர்ச்சி அளித்து வருகிறார்.

ஓவியா நடிக்கிறாரா, அல்லது உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்று பார்வையாளர்கள் குழம்பித் தவிக்க, “நிகழ்ச்சியிலிருந்து என்னை வெளியேற்றி விடுங்கள்” என்று பிக்பாஸை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் அவர்.

இன்று ஒளிபரப்பான எபிசோடில், இன்னும் ஒரு படி மேலே போய், மூச்சு விடாமல் இருக்க மூக்கைப் பிடித்துக்கொண்டு நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் ஓவியா..

இதை தற்செயலாகப் பார்த்த மற்றவர்கள் பதறி ஓடிவந்து அவரை தண்ணிருக்குள் இருந்து தூக்கி கரை சேர்த்து காப்பாற்றுகிறார்கள். .“நான் போகணும்” என்று அடம் பிடிக்கும் ஓவியாவை, காயத்ரி மூலம் சமாதானப்படுத்தும் பிக்பாஸ், “ஓவியாவின் மானேஜருக்கும், டாக்டருக்கும் தகவல் கொடுத்து விட்டோம். அவர்கள் வர 45 நிமிடங்கள் ஆகும். அதுவரை டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று காயத்ரியிடம் சொல்லி அனுப்ப, வெளியேறும் தருணத்துக்காக காத்திருக்கிறார் ஓவியா என்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

வழக்கமாக மறுநாள் எபிசோடுக்கான முன்னோட்டம், நிகழ்ச்சியின் இறுதியில் காட்டப்படும். ஆனால், நாளைக்கான முன்னோட்டம் இன்று காட்டப்படாதது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்படுவாரா என தெரிந்துகொள்ளும் ஆவலில் பார்வையாளர்கள் இருக்கும் நிலையில், “ஓவியா வெளியேற்றப்பட்டார்” என்ற தகவலும், அதற்கு ஆதாரமாக அவர் ஒரு சிவப்பு நிற காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஆனால், அது தற்போது எடுக்கப்பட்ட படம் இல்லை என்றும், முன்பு ஓவியா கேரளா சென்றிருந்தபோது அங்கு எடுக்கப்பட்ட பழைய படம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஓவியா வெளியேற்றப்பட மாட்டார் என்றும், பார்வையாளர்களை ‘மிஸ் லீடு’ பண்ணுவதற்காக இப்படி ஒரு படத்தை யாரோ (விஜய் டிவியாகவும் இருக்கலாம்) வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் ‘ஓவியா ஆர்மி’யினர் திடமாக நம்புகிறார்கள்.

0a1a

 

Read previous post:
0a1a
பிக்பாஸ் படிப்பினை: நாம் எல்லாருமே நீச்சல் குளங்கள் கிடைக்காத ஓவியாக்கள் தான்..!

பிக்பாஸ்: 04.08.2017 She is seriously ill. நான் எப்போதும் சொல்வதுதான். நாம் வாழும் சமூகம் மேலும் மேலும் பிளக்கப்பட்டு மனச்சிதைவு சமூகமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. Capitalistic

Close