’ஓ மை டாக்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் மூத்த நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், மற்றும் படத்தின் நாயகன் அருண் விஜய், அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு, இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல், சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-