முரசொலி பவள விழாவில் தற்காப்புடன் ரஜினி; தன்மானத்துடன் கமல்!

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். மேடை ஏறி பேசினால் ஏதாவது அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், அவர் தற்காப்பு உணர்வுடன், மேடையைத் தவிர்த்து, அரங்கில் பார்வையாளராக அமர்ந்துகொண்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டபோது மட்டும் மேடைக்குச் சென்று பெற்றுக்கொண்டார். அப்போதும் எதுவும் பேசாமல் கீழே இறங்கி வந்துவிட்டார்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறாரா? பேசுகிறாரா?என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக மட்டும் கலந்துகொள்ளலாம் என்று முதலில் நினைத்தேன்.

பின்னர் தான் எனக்கு தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம் என்று கருதி இங்கு பேச வந்திருக்கிறேன்” என்றார்.

மேடையின் எதிரே அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ரஜினி, கமலின் பேச்சை கைதட்டி, ரசித்துக் கேட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

Read previous post:
0a1
“திராவிடம் என்பது தமிழகம் மட்டும் அல்ல; அது நாடு தழுவியது”: கமல் பேச்சு!

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி' பத்திரிகையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

Close