‘கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில்  யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்நிலையில் பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், இப்படத்தின் ட்ரைலர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பு ட்ரைலரை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1b
‘கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு ட்ரைலர் – வீடியோ

விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கே ஜி. எஃப்

Close