“நீங்கள் குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிக்கிறீர்கள்”: கமல் காட்டம்!

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பாக எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பதில் அளிப்பதற்காக அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை விவகாரத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கமல், “பாவனா கடத்தப்பட்டதும், துன்புறுத்தப்பட்டதும் அநீதி. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. கேரள காவல் துறைக்கு என் பாராட்டுக்கள்” என்றார். அப்போது ஒரு பத்திரிகையாளர் “பாவனா பெயரைக் குறிப்பிட வேண்டாமே” என்று கேட்டபோது, “பெயரைக் குறிப்பிடுவதில் தவறில்லை” என்றார் கமல்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆரியத்துவவாதியும், தேசிய மகளிர் ஆணைய தலைவியுமான லலிதா குமாரமங்கலம், “பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் பெயரை பொதுவெளியில் சொல்வது தண்டனைக்குரிய குற்றம். எனவே பாவனா பெயரைக் குறிப்பிட்ட கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள கமல்,  “நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் கேட்கிறார்கள். நான் பெண்களை நேசிப்பவன். அவர்களுக்காக போராடுபவன். நான் காரணமின்றி யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

நீங்கள் குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிக்கிறீர்கள். நான் ஏன் அவரது பெயரை குறிப்பிடக் கூடாது? என் தாய் மற்றும் மகளுக்கு அடுத்து அவரின் பெயரைக் குறிப்பிட்டேன்.

நீங்கள் என்னை இனியும் மன்னிப்பு கேட்கச் சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை – உங்கள் கடவுள்களைத் தவிர.  காரணமற்ற கடவுளும்கூட சிலருக்கான தந்திரம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

Kamal HaasanVerified account @ikamalhaasan

If you still want me to apoligize I will. No one is above law …except your gods. God is no reason just a ruse for some.

 

Read previous post:
0
“ரஜினி – மோடி கூட்டணி தமிழக அரசியலையே மாற்றிவிடும்” என்கிறார் குருமூர்த்தி!

“நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்” என்று கூறியுள்ளார், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஆரியத்துவவாதியும், ‘துக்ளக்’ பத்திரிகையின்

Close