‘அகில இந்திய விவசாயிகள் கட்சி’யில் சேர “வாழிய பாரதம்” கமல் அழைப்பு!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தால் தமிழர்கள் கொதித்துப் போயுள்ள நிலையில், அச்சம்பவம் பற்றி கருத்துக் கூறாமல், ஓட்டுப் பொறுக்குவதிலேயே கவனமாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் வகையில் “வாழிய பாரதம்” என்ற துதியுடன் ட்விட்டரில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்” என கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கென்று இடதுசாரி கட்சிகளும், ஏனைய ஜனநாயக சக்திகளும் ஏற்கெனவே சங்கங்கள் அமைத்து போராட்டம் நடத்திவரும் நிலையில், கமல் ஏன் அவற்றை பலவீனப்படுத்தும் வகையில் ‘ஆள் கடத்தல்’ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்?

கமல் ஒரு ‘பாரதீயர்’ என்பதாலா?

 

Read previous post:
0a1d
தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடற்படை துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்!

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை, ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச்

Close