“பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் டேக்ஓவர் செய்து கொண்டார்! கமல்டா…!!”

கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பொருந்தாமல் கொஞ்சம் திணறினார். கமலை ஒரு உயர்தளத்தில் வைத்து பார்த்துவிட்டு டிடி போல பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதுவும் வணக்கம் போட்டுக்கொண்டே, கூப்பிய கைகளை ஆட்டிக்கொண்டே ஸ்டேஜ்க்கு நடந்து வந்ததெல்லாம் அக்மார்க் டிடிதான். இப்படியாக எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்திற்குள் கமலை நிறுத்தியதன் விளைவு அது…

vivo வழங்கும் பிக்பாஸ், co sponcerd by இன்னும் சில கம்பெனி பெயர்களைச் சொல்லி, விளம்பர இடைவேளைக்கு பிறகு என்று சொல்லும்போது (வழக்கமாக அப்படித்தான் இடைவேளை விடுவார்கள்) அவருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. P.HD முடிச்சவரை கூட்டி வந்து அ, ஆ சொல்லச் சொல்ற மாதிரி இருந்துச்சு..

அதை அவரும் உணர்ந்து சில விதிமுறைகள் விதித்து இருப்பார் என்று எண்ணுகிறேன். என்னை ஆட்டுவிக்காதீர்கள், நானே ஆடிக் கொள்கிறேன் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை டேக்ஓவர் செய்துகொண்டார். நேற்றைய நிகழ்ச்சியில் பார்த்தவர்களுக்கு தெரியும், எந்த நிறுவன விளம்பரங்களையும் சொல்லாமல், வெறுமனே பிக்பாஸ் என்று மட்டும் தான் சொல்லி இடைவேளை விடுவார். அதுதான் கமல் என்ற பிம்பத்திற்கு பொருந்தவும் செய்கிறது.

எல்லாம் தாண்டி, இந்த நிகழ்ச்சியோடு எப்படி ஒன்றிப் போயிருக்கிறார் என்றால்… ”எல்லாவற்றையும் பேசி விட்டேன் என்று நினைக்கிறேன் ஒன்றை தவிர….. பரணி…”

ப்பா… ”பரணி”ன்னு சொல்ற மாடுலேஷன் இருக்கு பாருங்க… செம்ம.

இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். கமல் இவ்வாறாக சொன்னார்: ”சாலையை சுத்தப்படுத்தும் துப்புரவு பணியை செய். அதுவும் தொழில் தான். அதில் எந்த கீழ்மையும் இல்லை. ஆனா இந்த ஊர்ல யார் நல்லா சாலை சுத்தப்படுத்துவாங்க என்று கேட்டால் எல்லாரும் உன்னைதான் கை காட்டணும்.” சம்திங் லைக் தட் இந்த மாதிரி தான் சொல்லி இருந்தார்..

எவ்வளவு உண்மை…! ம்ம்ம்ம்… எங்கிருந்தாலும் அவன் அரசன் தான். #கமல்டா

MEENAMMA KAYAL

 

Read previous post:
0
பண்டிகை – விமர்சனம்

மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று.

Close