“அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி!” – கமல்ஹாசன்

“தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது” என விமர்சனம் செய்ததற்காக நடிகர் கமல்ஹாசன் மீது வன்மம் கொண்டு தமிழக அமைச்சர்கள் மிரட்டல் விடுத்திருப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.
என் ஆதங்கங்களில் பல உங்கள் கோப செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.
ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான். இதனை உணர மறுப்பவர்கள் தலைவராக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது” என கூறியுள்ளார்.