கேரள முதல்வருக்கு கமல் நன்றி: “பெரியாரின் கனவு நனவானது!”

கேரளாவில் உள்ள இந்து கோயில்களில் பட்டியலின சாதியினர், பட்டியலின தொல்குடியினர் உள்ளிட்ட பர்ர்ப்பனரல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பார்ப்பனராதிக்கத்தை தகர்த்து சமூக நீதியை நிலை நாட்டுவதற்கான இந்நடவடிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும், நன்றிகளும் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனும் கேரள முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“Bravo Travancore Dewasom board. Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar’s dream realized” என்று ஆங்கிலத்திலும்,

“திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்” என்று தமிழிலும் கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1d
சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் வேண்டும்: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்!

சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரை பொறிக்க வேண்டும் என நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு

Close