கமல்ஹாசன் வீட்டை நெருங்க முடியாத இந்து மக்கள் கட்சி கும்பல்!

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிப்பரப்பாகிவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கோட்பாடான ஆரியத்துவ மேலாதிக்கம் மற்றும் ஆரியத்துவ கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்து, தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் துரோகம் இழைத்துவரும் ஆரியத்துவவாதிகளான இந்து மக்கள் கட்சியினர், “பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பாரம்பரியம் மற்றும் தமிழ்ச் சமூகத்தை கெடுக்கும் வகையில் உள்ளது” என்று நீலிக்கண்ணீர் வடித்து, “பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” என்று சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) இந்து மக்கள் கட்சியினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் போலீஸாருக்கு முன்னரே கிடைத்ததால், கமல் வீட்டின் முன் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கமல் வீட்டை நெருங்க முடியாத இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல், கமல் வீட்டுக்கு வெகுதொலைவில் உள்ள ஒரு பகுதியில் கட்சிக்கொடியுடன் நின்று முழக்கம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றது.

0

Read previous post:
0
பாவனா கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட

Close