ஹெச்.ராஜாவை கிண்டலடித்து கலாய்க்கும் ‘தொடரி’ படக்காட்சி – வீடியோ!

பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தொடரி’. இப்படத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில கலந்துகொண்டு பேசும் ஒரு கட்சி பிரமுகர், முதலில் ஒரு கருத்தை சொல்லுகிறார். பின்னர் “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று பல்டி அடித்து அடம் பிடிக்கிறார்.
‘தொடரி’யில் வரும் இந்த காட்சி, பா.ஜ.கவின் ஹெச்.ராஜாவை நினைவூட்டும் வகையில் இருக்கிறது என்று கூறி, ‘தொடரி’யின் அக்காட்சியும், ஹெச்.ராஜா நிஜத்தில் கலந்துகொண்ட ஒரு விவாத நிகழ்ச்சி காட்சியும் இணைக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ: