விக்ரமின் ‘கோப்ரா’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரமின் ‘கோப்ரா.  இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1g
விக்ரமின் ‘கோப்ரா’  படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரமின் ‘கோப்ரா.  இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ்

Close