விஜய்யின் ‘பைரவா’ ட்ரெய்லர் 50லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைரவா’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, ஜனவரி 12ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ‘பைரவா’ ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்தில் சுமார் 15லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

தற்போது 50லட்சம் பார்வைகளை கடந்திருக்கும் ‘பைரவா’ ட்ரெய்லர், பொங்கல் பண்டிகைக்குள் ஒரு கோடி பார்வைகளை கடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

மேலும், விஜய் படங்களின் வியாபாரத்தில் ‘பைரவா’ ஒரு மைல்கல்லைத் தொட்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. சுமார் 50 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணத்தை எடுக்க ‘பைரவா’ சுமார் 75 கோடி அளவுக்கு வசூல் செய்ய வேண்டும். இதனால் ஏராளமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

   

Read previous post:
0a1b
திரிஷா நடிக்கும் ‘1818’: இரு மொழிகளில் தயாராகிறது!

மைண்ட் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “1818” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், சூது கவ்வும்

Close