முழு கதாநாயகியாக உருவாகி கெத்து காட்டிவரும் ஜெசிகா பவ்லின்

அழகும், நடிப்பாற்றலும் கொண்ட நடிகை ஜெசிகா பவ்லின், ஏற்கெனவே ’துப்பறிவாளன்’ படத்தில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ’ராட்சசன்’ படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ’ஏஞ்சலினா’ படத்தில் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின், தற்போது ’ஏகாலி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படிப்படியாக உயர்ந்து முழு கதாநாயகியாக உருவாகியிருக்கும் ஜெசிகா பவ்லினின் புகைப்படங்கள்:-