‘ஆதார்’ திரைப்படத்தின் ஆடியோ & ட்ரைலர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருடன் இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா.சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: